ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது – ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஸ்திரமான சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனவும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளுடன் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களுக்கு நல்ல புரிதல் உண்டு.

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல்களுடன் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய போதிலும் தற்பொழுது நாட்டில் சமாதானம் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.