தேர்தல் காலங்களில் அதிகூடிய தொகைக்கு கட்சிகளை விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!

Report Print Sindhu Madavy in அரசியல்

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இது குறித்து நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் ​தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றனர்.

குறித்த கட்சிகளில் பதவிகளை வகிக்கும் நபர்களுக்கிடையில் மோதல் ஏற்படுகின்றமையால் இது ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.