தெரிவுக்குழுவில் தயாசிறி முன்னிலை ஆகாவிடில்...? சரத் பொன்சேகா

Report Print Jeslin Jeslin in அரசியல்

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற தெரிவுக்குவிற்கு சாட்சியமளிக்க வராவிடின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது.

அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது எனவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers