பெரும் சிக்கலில் மஹிந்த தரப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

போதைப்பொருள் வர்த்தகத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளதாக வெளியாகி தகவலுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான மாகந்துரே மதுஷினால் வெளிப்படுத்திய தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் மாகந்துரே மதுஷினால் பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.

அத்துடன் மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பல அரசியல்வாதிகள் இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக தெரியவந்துள்ளது.