ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால கொள்கைகள் தற்போது மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம் யக்கலை - வீரகுல பிரதேசத்தில் பெண் சுயதொழிலாளிகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், தனது, தாய், தந்தை மற்றும் தான் கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இல்லை.
கட்சிக்குள் நடக்கும் எதுவும் தனக்கு தெரியாமல் நடப்பதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.