நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்...? விளக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்கி

Report Print Gokulan Gokulan in அரசியல்

நான் நீதித்துறையில் நீண்டகாலம் பணிபுரிந்ததன் விளைவாக எனது வாழ்க்கையில் பெரும்பகுதி மக்களில் இருந்து ஒதுங்கிய ஒரு தனிமை வாழ்க்கையாகவே கழிந்து விட்டது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர மனிதத்துவ உணர்வுகள் இருந்தபோதும் அதை வெளிக்கொண்டுவர எனது பதவி முட்டுக்கட்டையாக இருந்தது. தீர்ப்புக்களில் அவை பிரதிபலித்தன.

ஆனால் மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது அரசியலில் முழுநேரமாக இறங்கிய பின்னர் எம் மக்கள்தான் எனது கரிசனையாக ஆகிவிட்டார்கள். மக்களோடு மக்களாக இணைந்து செயற்படவே அரசியலில் இறங்கினேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers