டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துரே மதூஸிடமிருந்து கிடைத்த தகவல்களை வைத்து விரைவில் பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மதூஸிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்தும் அவர் சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
முன்னர் ஒரு தடவை குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய அவருடைய வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது முன்னாள் ஜனாதிபதி தான் அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.