சட்டசிக்கலிற்கு மத்தியில் வைகோ வேட்பு மனு தாக்கல்

Report Print Malar in அரசியல்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவசனிடம் இன்று காலை 11 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வெற்றிடமாகும் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

அந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி நாளாகும்.

இதற்கிடையே தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்பட்டதுடன், ஆனால், அவர் போட்டியிடுவதற்கு சட்டசிக்கல் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.