கைது செய்யப்படவிருந்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றை நடத்தி சென்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை கொமடோர் விஸ்வஜித் நந்த தியபலனகே ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று முற்பகல் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பாக வழக்கில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி நிஷ்சங்க சேனாதிபதி உட்பட சந்தேக நபர்கள், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், நிஷ்சங்க சேனாதிபதி மற்றும் விஸ்வஜித் நந்த தியபலனகே நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.

அவன்கார்ட் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிஷ்சங்க சேனாதிபதியும் விஸ்வஜித் நந்த தியபலனகேவும் அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.