நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்! அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஒரே சட்டத்தை கொண்டு வருவதன் மூலமே ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்களை இழந்த அனைவரது வாழ்க்கைக்கும் பெறுமதியை பெற்று கொடுக்க முடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் இருக்கின்றனர். எனினும் தனித்து வாழ முடியாது. அர்ப்பணிப்புகளை செய்ய முடியுமாக இருக்க வேண்டும்.

இதனால், பல மத அடிப்படைகளுக்கு அமையவும் தத்தமது மத விருப்பங்களுக்கு அமையவும் வாழ முடியாது என்பதை சகல மத தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் தனித்தனியாக காணி சட்டங்கள், திருமண சட்டங்கள் என வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது.

நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.