ஜே.வி.பியின் பொது வேட்பாளராக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான முற்போக்கு அணியின் சார்பில் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

மக்கள் விடுதலை முன்னணியும் காமினி விஜேசிங்கவும் ஒரே அரசியல் மேடையில், ஒரே மாதிரியான அரசியல் நீரோட்டத்தில் பயணித்து வருவதால்,இப்படியான தகவல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பதவியில் இருந்த போதும், ஓய்வுபெற்ற நிலையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான முற்போக்கு அணியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் மக்கள் விடுதலை முன்னணி நிறுத்த உள்ள பொது வேட்பாளர் குறித்து அந்த முன்னணி இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers