சஜித் பிரேமதாஸவே பொருத்தமானவர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸவே பொருத்தமானவரென சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயாகமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை முன்நோக்கி கொண்டுச் செல்லக்கூடிய திறமை சஜித் பிரேமதாஸவுக்கே உள்ளதென தயா கமகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆகையால் அவரிடமே ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers