மாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீர நாளை முன்வைக்க போகும் யோசனை

Report Print Steephen Steephen in அரசியல்

நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலுக்குள் பிரவேசித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நாளைய தினம் மாத்தறையில் விசேட வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மங்கள சமரவீர இணைய ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கையில் இதனை கூறியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசியுடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த போவதாக மங்கள குறிப்பிட்டிருந்தார்.

மாத்தறையில் நாளை நடைபெறவுள்ள வைபவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பல சிரேஷ்ட பிரதிநிதிகள் பலருக்கு மங்கள அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமாக இருந்த பலர் தற்போது சஜித் பிரேமதாச பக்கம் சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் சஜித்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் 80 வீதமானோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.