சுதந்திரக் கட்சியினருடன் முரண்படும் இரண்டு ஆளுநர்கள் - பதவிகளை பறிக்க போவதாக கூறிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ஆகியோர் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பில், இந்த ஆளுநர்கள், தொகுதி அமைப்பாளர்களுடன் நட்புடன் நடந்துக்கொள்வதில்லை எனவும் தான்தோன்றித்தனமாக நடந்துக்கொள்வதாகவும் பல தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்களாக மகிந்த அமரவீர மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் ஆளுநர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளனர். அங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, ஆளுநர்களை பதவிகளில் இருந்து நீக்க போவதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.