ஒழிக்கவும் மறைக்கவும் எதுவுமில்லை, மகிந்தவே அடுத்த பிரதமர்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலமே தெரிவு செய்யப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒழுக்கமான வேட்பாளர் எமது கட்சியின் சார்பிலேயே நிறுத்தப்படுவார். பெண்களை மதிக்கும் வேட்பாளர். மேற்குலக நாடுகளிடம் அடிப்பணியாத முதுகெலும்பு உள்ள வேட்பாளரை கட்சி நிறுத்தும். வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி மொட்டு மலரும். நாட்டை மாற்றியமைக்கும் திருவிழா நவம்பரில் நடக்கும். ஒழிக்கவும் மறைக்கவும் எதுவுமில்லை மகிந்த ராஜபக்சவே பிரதமர்.

திருமணம் செய்பவரின் பெயரை ஏற்றுக்கொள்ளும் முன்னர் பல வேலைகள் இருக்கின்றன. ஜாதக பொருத்தம் இருந்தால் மட்டுமே பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள்.

இதன் பின்னர் திருமணம் செய்து தேன்நிலவுக்கு செல்ல வேண்டும். பிள்ளைகள் பிறந்த பின்னரே பிரதிபலன்கள் கிடைக்கும். இந்த நிகழ்ச்சி நிரலை தவறாக்கி கொண்டவர்களே முதலில் பெயரை குறிப்பிடுவார்கள் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.