2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு

Report Print Sindhu Madavy in அரசியல்

சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாம் என ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பாக கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திடுவதன் மூலம், அமெரிக்க இராணுவம் ஆயுதத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்.

பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும். இந்த உடன்படிக்கையின் மூலம் நாட்டுக்கு பாரியளவில் பாதிப்பே ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers