கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வாய்பில்லை! ஞா.சிறிநேசன்

Report Print Kumar in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரானால் அவர் வெற்றிபெறுவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வீடமைப்பு கொலணிக்கு செல்லும் வீதி கொங்கிறீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் வே.புவிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எந்தவகையிலும் சிறுபான்மை சமூகத்தின் மனதை வெற்றிகொள்ளவில்லை. இனங்களிடையே, மதங்களிடையே பிரித்தாளும் தந்திரங்களை பயன்படுத்தி சிலர் குளிர்காய நினைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் மிகமோசமான நிலையில் இந்த வீதி காணப்பட்டது, மழைகாலத்தில் மக்கள் பயணிக்க முடியாத நிலையிலும் இவ் வீதி காணப்பட்டுள்ளது, தற்போது குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதன்போது தன்னாமுனை வீட்டுத்திட்டம் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக தன்னாமுனை வீட்டுத்திட்டம் பகுதியில் 170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை தாங்கள் எதிர்கொள்வதாக இங்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.