இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படாது! தேர்தல்கள் ஆணைக்குழு

Report Print Kamel Kamel in அரசியல்

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இனி வரும் காலங்களில் பதிவு செய்யப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன மற்றும் மத ரீதியான அரசியல் கட்சிகளை பதிவு செய்வதன் மூலம் மத மற்றும் சமூக ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் மத மற்றும் இன ரீதியான கட்சிகள் பதிவுக்கு உட்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இன மற்றும் மத ரீதியாக பதிவுக்கு உட்படுத்தப்பட்ட அரசியல் கட்சிகள் பெயர் மாற்றம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers