விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.

நாளைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காணி விசேட ஏற்பாடுகள் பிரேரணை குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த பிரேரணை குறித்து ஏற்கனவே நீதிமன்றில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த கட்சித் தலைவர் கூட்டம் பற்றி அறிவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Latest Offers