ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பெண் வேட்பாளர்?

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பண்டாரநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சி அரசியல்களின் ஊடாக நாட்டை மேலும் அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்ல முடியாது என தமக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் எந்தவொரு அரசியல் கட்சியினதும் ஆதரவு இன்றி சுயாதீனமாக போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers