இலங்கையில் நரேந்திர மோடி பெயரில் கிராமம்

Report Print Steephen Steephen in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அமைய வீடமைப்புத் திட்டத்திற்கு இந்தியா 12 ஆயிரம் லட்சம் ரூபாயை இலங்கைக்கு வழங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டம் அத்தனகல்லை ரன்பொக்குனுகம பிரதேசத்தில் புதிய கிராமம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் மோடி இலங்கை வந்திருந்த போது, அவரது பெயரில் திஸ்ஸமஹாராமை பிரதேசத்தில் நரோந்திர மோடி கிராமம் என்ற பெயரில் கிராமம் ஒன்றை நிர்மாணிப்பதாகவும் தான் உறுதியளித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers