உபாலி தென்னக்கோன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவு

Report Print Kamel Kamel in அரசியல்

பிரபல ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரியான லலித் ராஜபக்ச என்பவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் உபாலி தென்னக்கோனின் வாகனத்தில் காணப்பட்ட கைவிரல் அடையாளம், இராணுவ அதிகாரி லலித் ராஜபக்சவினது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லலித் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது பாரியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers