கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

யார் எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளது என ஊடகத்துறை அமைச்சரும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளை காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த அழுத்தங்களும் இன்றி ஊடகங்களை நடத்தி செல்ல அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். யார் எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் கடந்த அரசாங்கத்தை விட நாங்கள் சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றோம்.

கடந்த அரசாங்க காலத்தில் நடந்த ஆட்கடத்தல்கள், ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறவில்லை. அரசாங்கம் என்ற வகையில் இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

நாட்டில் உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். பிரதேச ஊடகவியலாளர்களே அதிகம் பாடுபடுகின்றனர். திட்டு வாங்குகின்றனர் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers