பொலன்னறுவையில் சிறிசேன ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ரணசிங்க ஆட்சியை ஏற்படுத்துவேன்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போதுள்ள மிகப் பெரிய அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயம் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே நிறுத்தப்படுவார் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி பூஜாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஹாரிஸ்பத்துவ தொகுதியின் இளைஞர் அணியை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்குமா என்றே தற்போது எங்கு சென்றாலும் கேட்கின்றனர். நாட்டில் இருக்கும் மிகப் பெரிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன, இம்முறை கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் தனது வேட்பாளரை நிறுத்தும். இதனை உறுதியாக கூறுகிறோம்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எவரும் எந்த நேரத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்ள முடியும். மைத்திரிபால சிறிசேன ஐந்து ஆண்டுகளில் ஓய்வுபெறுவதாக கூறியே ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார் என்பதை மகிந்த அமரவீரவுக்கு கூற விரும்புகிறேன்.

பொலன்னறுவையில், சிறிசேன ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ரணசிங்க ஆட்சியை ஏற்படுத்த அவர் ஓய்வுபெறும் வரை நானும் காத்திருக்கின்றேன் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers