கிழக்கு மாகாணத்தை உலக பொருளாதாரத்திற்கு திறந்து விட வேண்டும்: சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சீனா, லாவோஸ், வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு திறந்து விட்டால், இந்த மாகாணம் மேல் மாகாணத்தை விட அபிவிருத்தி செய்ய முடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தை, சீனாவின் குன்மின் மாகாணம், பங்களாதேஷ், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் பொருளாதார செயற்பாடுகளுக்காக எமது திருகோணமலை, மட்டக்களப்பு பிராந்தியத்தை அறிவியல் ரீதியாக திட்டமிட்டு பொருளாதார வலயமாக திறந்து விட்டால், கட்டாயம், மேல் மாகாணத்தை தாண்டிய முன்னேற்றத்தை கிழக்கு மாகாணம் அடையும்.

எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் 70 ஆண்டுகள் கடந்தும், கிழக்கு மாகாண கடற்கரை பகுதிக்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்?.

பிராந்திய, உலக பொருளாதாரத்துடன் இணைந்த, நாட்டுக்கும் மக்களுக்கு பலத்தை பெற்றுக்கொடுக்க கூடிய பொருளாதாரம் கிழக்கில் இருக்கின்றதா?. இல்லை.

நடைமுறையில் இருக்கும் இந்த முறைக்குள் உருவாக்கிய அரசியல்வாதிகள் இன, மத பேதமின்றி, இதனை செய்யாது, தமக்கு ஏதுவானவற்றையே செய்து வருகின்றனர்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், மேல் மாகாணத்தை பிராந்திய மற்றும் உலக பொருளாதாரத்திற்கு திறந்து விட்டதை போன்று, கிழக்கு கரையோத்தின் நாயாறு, கொக்கிளாய் பிரதேசத்தில் இருந்து பாணம வரை நாம் உலக பொருளாதாரத்திற்கு திறந்து விட வேண்டும். அப்போது உலகில் பலமிக்க பொருளாதார வலயமாக கிழக்கை கட்டியெழுப்ப முடியும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers