மைத்திரிக்கு கனேடிய அரசிடம் இருந்து வந்த ஏமாற்றமான செய்தி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனேடிய அரச தலைவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜதந்திர ரீதியில் இந்த கோரிக்கை விடுத்திருந்ததுடன் கனேடிய அரசாங்கமும் ராஜதந்திர ரீதியில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாட்டின் அரச தலைவர், மற்றுமொரு நாட்டுடன் நெருங்கிய உறவுகளை பேணும் நோக்கில், மற்றைய நாட்டின் அரச தலைவருக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கான அழைப்பை விடுப்பதே வழக்கம்.

இதற்கான தகவல் பரிமாற்றங்கள் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது திகதிகள் சம்பந்தமான பிரச்சினை இருந்தால், அழைப்பு விடுத்த தலைவரை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பது வழமையான நடைமுறை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை கனேடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் தமது நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை அமுல்படுத்த காட்டிய ஆர்வமான அணுமுறை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் காட்டிய அனுபவமற்ற தன்மை ஆகியனவே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியமை உட்பட பல காரணங்கள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

கனடாவுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலேயே ஜனாதிபதி, கனேடிய அரச தலைவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers