காலியாகும் சுதந்திரக் கட்சியின் கூடாரம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணியை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்புமனுவோ, பிரதமர் பதவியோ வழங்கப்பட கூடாது என்ற கடுமையான நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுனவினர் இருப்பதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியை கைவிட்டு, வேறு அரசியல் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை அவர்கள் ஏற்கனவே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தெஹிவளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படுமாயின் அவர்களுடன் கூட்டணி சேர்வதில் பயனில்லை என கூறியிருந்தார்.

ஜனாதிபதி வேட்புமனுவையோ, பிரதமர் பதவியையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க போவதில்லை என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக சுதந்திரக் கட்சி கூறியுள்ளதையும் அந்த கட்சி மறுத்துள்ளது.

Latest Offers