மைத்திரியின் மகனுக்கு கிடைத்த விருது

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாம் சிறிசேன, ஒழுங்கு செய்த இரத்த தான முகாமில் அதிகளவானோர் இரத்த தானம் செய்துள்ளனர்.

அதிகளவான நன்கொடையாளர் இரத்த தானம் செய்த முகாம் என்ற விருதை தாஹாம் சிறிசேன ஒழுங்கு செய்திருந்த இந்த முகாமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். வார நாட்களில் நடத்தப்படும் இரத்த தான முகாம்களில் குறைவான அளவிலேயே இரத்தம் கிடைக்கும். எனினும் வார நாட்களில் ஒன்றில் தாஹாம் சிறிசேன ஒழுங்கு செய்த அதிகளவான இரத்தம் தானமாக கிடைத்துள்ளது.

தாஹாம் சிறிசேன இதுவரை 512 இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்துளளார். 200க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்யும் முகாம் மிகப் பெரிய இரத்த தான முகாமாக கருதப்படுகிறது.

Latest Offers