இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரித்தது சவுதி அரேபியா

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கான ஹஜ் யாத்திரீகர்களுக்கான கோட்டாவை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு அமைய தற்போது வழங்கப்படும் 3 ஆயிரத்து 500 கோட்டாவை, 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 வரை சவுதி அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கும் ஹஜ் கோட்டாவை சவுதி அரேபிய அரசு அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு இலங்கை தபால் மற்றும் இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் அரேபிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்பட்டுள்ள கோட்டாக்கள், ஹஜ் யாத்திரை செல்வதற்காக அமைச்சின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள யாத்திரீகர்ளுக்கு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Latest Offers