தாக்குதலை பயன்படுத்தி அரசியலுக்கு வர முயற்சிப்பது பயங்கரவாதம்: ஹெக்டர் ஹப்புஹாமி

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் பல நபர்கள் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விற்று எவராவது அரசியலுக்கு வர முயற்சிப்பார் என்றால், அதனை விட பெரிய பயங்கரவாதம் இந்த நாட்டில் இருக்காது.

நாட்டை அழிப்பது மாத்திரமல்ல, மக்கள் இடையில், இனவாதம், மத வாதத்தை உருவாக்கி, நாட்டை மிதித்து, வயிற்று பிழைப்பு அரசியலில் ஈடுபட்டு தம்மை போஷித்து கொள்ள முயற்சிப்பார்கள் எனில், அனைத்து குடிமக்களும் இணைந்து அதனை தடுக்க வேண்டும். இதனால், தற்போது அறிவை பயன்படுத்தி சமூகத்தில் வாழுங்கள்.

கண்ணில் பார்ப்பதை விட ஒன்று அதற்கு பின்னால் மறைந்திருக்க முடியும் எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers