நான் நலமாக இருக்கின்றேன் விரைவில் நாடு திரும்புவேன் - கோத்தபாய குறித்து பந்துல

Report Print Steephen Steephen in அரசியல்

வழக்கு விசாரணைகளில் ஆஜராக மிக விரைவில் இலங்கை திரும்ப உள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் உடல் நலம் குறித்து அறிய சிங்கப்பூர் சென்று விட்டு நாடும் திரும்பிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் நலமாக இருக்கின்றேன். வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள கூடிய விரைவில் இலங்கை திரும்புவேன் என சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கோத்தபாய ராஜபக்ச கூறினார்.

சத்திர சிகிச்சையின் பின்னர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 20 வயது குறைந்து இளமையாக மாறியுள்ளார். எவரும் கோரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட மட்டுமல்ல. அவர் எதற்கு தயாராக இருக்கின்றார் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வதந்திகள் அதிகமாக பதவி வருவதாகவும் தனக்கு அமெரிக்க குடியுரிமை இருக்குமாயின் சிங்கப்பூரில் அதிகமாக பணத்தை செலவிட்டு சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என கோத்தபாய கூறியதாகவும் யோக பயிற்சிகளை செய்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இன்னும் பலத்துடன் இருப்பதாகவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers