மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்குவதை நிறுத்த முடியாது: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மக்களுக்கு சொந்தமாக காணி உரிமைகளை வழங்குவதை தடுக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் தயா எப்பரல் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 10 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் வைபவத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மக்களுடன் வீதியில் இறங்கி, போராட்டம் நடத்தி, மக்களுக்கு காணி உரிமை அவசியம் என்ற செய்தியை நாட்டுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம்.

மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்கும் சட்டமூல வரைவை தயாரித்து அமைச்சரவை அனுமதியை பெற இரண்டு ஆண்டுகள் சென்றது. அந்த சட்டமூலத்திற்கு அனுமதி பெற்று, வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்குவதற்கு எதிராக இரண்டு அமைப்புகள் செயற்பட்டுள்ளன. இவர்கள் யார்?. இந்த அமைப்புகள் என்ன?. மக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்போர் எதிரணியில் இருக்கின்றனர்.

மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதை நிறுத்த வழக்கு தொடர போகிறார்களாம். இந்த போராட்டத்தை கைவிட முடியாது. நாம் சிறிது தூரம் வந்து விட்டோம். கடந்த முறை இப்படியான சட்ட மூலத்தை முன்வைத்த போது பலவகையில் எதிர்த்தனர். அப்போது சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் நாங்கள் அரசாங்கமாகவும் இயங்கினோம்.

பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. முதலமைச்சர்கள் எதிர்த்தனர். அதனை தடுத்து நிறுத்தினர். எனினும் இம்முறை அதனை தடுத்து நிறுத்த இடமளிக்க முடியாது. இப்படியான புரட்சிகரமான திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers