அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் இல்லாத பயங்கரமான நிலைமை

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதான அரசியல் கட்சிகள் எவற்றிலும் தேசிய தலைவர்கள் இல்லை எனவும் அது நாட்டின் எதிர்காலம் சம்பந்தமான பயங்கரமான நிலைமை எனவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

சிங்கள வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கறுப்பு ஜூலையின் பின்னர் ஏற்பட்ட 26 வருட யுத்தம், ஜே.வி.பி புரட்சி என்பவற்றால், ஏற்பட்ட அரசியல் கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்களின் அகால மரணங்கள் இதற்கு அடிப்படை காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

1988-89ஆம் ஆண்டுகளில் நடந்த வன்செயல்களில் மாத்திரம் சுமார் 50 தலைவர்கள் கொல்லப்பட்டனர். காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி, விஜய குமாரதுங்க, சரத் முத்தேட்டுவேகம, ரஞ்சன் விஜேரத்ன ஆகியோரின் அகால மரணங்களை தற்போது நன்கு உணர முடிகிறது.

இடதுசாரி மற்றும் வலதுசாரிகள் என அரசியல் கட்சிகள் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். கட்சிகளுக்கு ஜனநயாகம் இல்லை என்பதால், இந்த நிலைமை மேலும் கெடுதியான நிலைமைக்கு சென்றுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு உலக மாற்றங்கள் பற்றி புரிதல் இல்லை. அவர்கள் உளவியல் காரணங்களின் அடிப்படையில் அரசியல் செய்கின்றனர்.

புத்தகங்களை வாசிக்காத, உலகத்தை பற்றிய அக்கறை இல்லாதவர்களால் நாடாளுமன்றம் நிரம்பியுள்ளது. வர்த்தகத்தை ஆரம்பிப்பதே அரசியலில் பிரவேசிக்கும் பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கின்றது.

கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை வழங்கும் போது செல்வந்த நிலைமையை தகுதியாக பார்க்கின்றே அன்றி அறிவை பார்ப்பதில்லை. இதற்கு கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers