மக்களின் நகைகளை அடகு வைத்து இந்த அரசு தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றது

Report Print Suman Suman in அரசியல்

இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை எம் மக்களுக்கு கொடுத்து, மக்களின் நகைகளை அடகு வைத்து இந்த அரசு தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றச்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பகுதியில் நேற்று கிராமசக்தி வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என கூறும் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்திருந்த போது பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் கதைத்து தான் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறினர்.

ஆனால் பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா மீண்டும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

இங்குள்ள அனைத்து பிரதிநிதிகளும் கதைத்து தான் காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசாங்கத்தில் நல்லது நடக்கும் போது தமக்கு பங்குண்டு எனவும், கெட்டது எனில் தமக்கும் அரசுக்கும் பங்கில்லை என்றது போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்றும், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


you may like this video....