தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் இதுவே

Report Print Gokulan Gokulan in அரசியல்

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மண்டூர், கணேசபுரம் கண்ணகி விளையாட்டு கழகத்தின் மாபெரும் கால் பந்தாட்ட சுற்றுப்போட்டி, கழகத்தின் தலைவர் செ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கின்ற மரண தண்டனை விடயத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை மரண தண்டனை இடம்பெறக்கூடாதென்று 12 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீதித்துறை என்னதான் செய்ய போகின்றது என புரியவில்லை. மரணதண்டனை போதுமானதா அல்லது சீர்திருத்த தண்டனை தேவையா, ஆயுள் தண்டனையாக தான் என்ற கேள்வி எழுகின்றது.

ஜனாதிபதியின் இந்த பரீட்சையில் யார் வெல்லப்போகின்றார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பில்தான் இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

You My like this video


Latest Offers