கல்முனை உபப்பிரிவை தரமுயர்த்தும் விவகாரம்! தவறை சுட்டிக்காட்டும் எம்.பி

Report Print Sujitha Sri in அரசியல்

கல்முனை உபப்பிரிவை தரமுயர்த்தும் விடயத்தினை இத்தனை தூரம் வளரவிட்டமை தவறாகும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கல்முனை உபப்பிரிவை தரமுயர்த்துவது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த விடயத்தினை அரசியல் ரீதியாக கையாள முடியாதிருக்கின்ற நிலையில் இரு தரப்பிலும் புத்திஜீவிகள் குழுக்களை அமைத்து அதன் ஊடாக பேச்சுக்கள் முன்னெடுத்து தீர்வினை எட்ட முடியும்.

ஆனால் இந்த விடயத்தினை இத்தனை தூரம் வளரவிட்டமை தவறாகும். இந்த விடயம் தொடர்பில் அண்ணன் சம்பந்தனும், சகோதரர் ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினைக் கண்டிருக்கலாம்.

அல்லது சகோதரர் ஹரீஸும், கோடீஸ்வரனும் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும்.

இவற்றில் ஏற்பட்ட பின்னடைவுகள் தான் நிலைமைகள் மோசமடைந்து மூன்றாவது தரப்பிடத்தில் செல்வதற்கு காரணமாக இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers