பிரதமர் காரியாலயத்தினால் கடும் சொற்கள் அடங்கிய கடிதம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு பிரதமர் காரியாலயம் கடும் சொற்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை, அதேபோல செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக தெளிவு தன்மை தேவை என்ற அடிப்படையில் கடிதமொன்றை பிரதமர் காரியாலயத்துக்கு அனுப்பியுள்ளது.

அதற்கான பதில் கடிதம் ஒன்றினை பிரதமர் காரியாலயம் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு அனுப்பியுள்ளது.

குறித்த பதில் கடிதம் பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இலங்கை வர்த்தக சம்மேளனமும், இணைத்து கொள்ளப்பட்டதினை இந்த கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டமைக்கு தற்போது இந்த உடன்படிக்கைகள் தொடர்பான தெளிவு தன்மை தேவை என்ற ஒரு விடயத்தை இலங்கை வர்த்தக சம்மேளனம் எழுப்பியிருப்பது, அது அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சோபா எனப்படும் படைகள் தொடர்பான உடன்பாடு இன்னும் அமைச்சரவைக்கு பாரப்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் காரியாலயம் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.