இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரிக்கு அமெரிக்கா அழைப்பு?

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரி ஒருவருக்கு அமெரிக்காவில் இடம்பெறுக்கின்ற ஒரு பயிற்சிக்காக விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் இராஜதந்திரி ஒருவருக்கு அமெரிக்காவின் (visiters programme) என சொல்லப்படுகின்ற IVP என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதக் காலத்துக்கான பயிற்சி இதன் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த அழைப்பிதல் எவ்வாறு அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதனடிப்படையில், குறித்த இராஜதந்திரிக்கு அமெரிக்க திட்டத்திற்கான அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்ல முடியாது என்ற உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரியாக இருக்கும் வரை இந்த அமெரிக்க நிகழ்ச்சி திட்டத்துக்கான பயணத்தினை அவரால் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினையும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.