பயங்கரவாத பீதியில் வாழும் மக்கள்: மகிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

மக்கள் பயங்கரவாதம் தொடர்பிலான பீதியில் வாழ்ந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

தமது ஆட்சிக் காலத்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் மக்கள் அஞ்சவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 ஆண்டுகள் நீடித்து வந்த அச்சம் இல்லாமல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளில் மீண்டும் மக்கள் பீதியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய முடியாத அரசாங்கமொன்று தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers