அமெரிக்கவுடனான சோபா உடன்படிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட சர்ச்சைகள்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவுடன் இலங்கை செய்துக் கொள்ளவுள்ள சோபா (sofa) என்று சொல்லப்படுகின்ற உடன்படிக்கை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையை பொருத்த வரை எதிர்க்கட்சி தற்போது இந்த விடயத்தை கடுமையான விமர்சனத்திற்குட்படுத்தி அரசாங்கத்துக்கு விமர்சனத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த அமெரிக்க பாதுகாப்பு விடயங்களில் முக்கிய பங்காற்றுகின்ற சாலிபோட் (sallyport) என்ற நிறுவனம், இலங்கையின் பாதுகாப்பு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு இந்த பாதுகாப்பு பிரிவுகளிலிருந்து முழு நேரம் அல்லது பகுதி நேர பணியாளர்கள் தேவை என்ற ஒரு விளம்பரத்தையும் சாலிபோர் (sallyport) நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இந்த சாலிபோட் (sallyport) நிறுவனம் பெரும்பாலும் இலங்கையின் உள்ளக பாதுகாப்பு விடயங்களிலும் தமது செல்வாக்கினை செலுத்தியுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers