ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை! அமைச்சர் சீற்றம்

Report Print Kamel Kamel in அரசியல்

ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு மேற்கொண்ட அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொண்டதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

செங்கடகல மஹாகந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்ள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

எமக்கு இந்த அரசாங்கம் கையில் கிடைக்கப் பெற்ற போது கடன் செலுத்த முடியாதிருந்தது.

மஹிந்த ராஜபக்சவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க அவகாசம் இருந்தது.

இரண்டாண்டுகளுக்கான கடனை செலுத்த முடியாது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றமடைந்திருந்தது.

இவ்வாறான ஓர் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குச் சென்றார்.

ஐந்து ஆண்டுளில் நாம் இந்த நாட்டை ஆட்சி செய்து கடன் சுமைகளை குறைத்து, சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.

இவர்களுக்கு தெரிந்த விடயம் ஒன்று மட்டுமே உள்ளது அது எந்தவொரு விடயத்தையும் சீர்குலைப்பதாகும்.

நீங்கள் பார்த்தீர்கள் ராஜபக்ச தரப்பு எவ்வாறு நாடாளுமன்றில் நடந்து கொண்டது என்பதனை.

1948ஆம் ஆண்டு முதல் எந்தவொரு நாளும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டதில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட நாடாளுமன்றிற்கு இவ்வாறான ஓர் அழிவினை ஏற்படுத்தவில்லை.

தொலைக்காட்சியில் நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள், சபாநாயகரை தாக்கி நாடாளுமன்றில் குழப்பம் விளைவித்தனர்.

அதனை மஹிந்த தடுக்காது அதனை மேலும் மேலும் செய்யுமாறு உத்தரவிட்டார். அவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அவர்களது வங்குரோத்து நிலைமை வெளிப்படுகின்றது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Latest Offers