நாடாளுமன்றில் சிறந்த உறுப்பினராக தரப்படுத்தப்பட்டுள்ள கூட்டமைப்பின் எம்.பி

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலில் 9ஆவது இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தரப்படுத்தலில் முதலாவது இடத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பெற்றுக்கொண்டுள்ள அதே நேரம், முதல் பத்து இடங்களுள் நான்கு இடங்களை மக்கள் விடுதலை முன்னணியைச் சார்ந்த நான்கு உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தொடர்ந்து இந்த தரப்படுத்தலில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மேலும், இவர் இந்த தரப்படுத்தலில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள போதிலும் இவருக்கு நாடாளுமன்றில் உரையாற்ற வழங்கப்படும் நேரம் மிக குறைந்தளவில் காணப்படுவதால் இவரால் குறித்த தரப்படுத்தலில் முன்னேறிச் செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You My Like This Video