ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: தில்ருக்ஸி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தொழில்துறைக்கும் இது பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது சீனாவிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள தில்ருக்ஸி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.