தேசிய பாதுகாப்புக்கு இராணுவம் மட்டும் போதாது! சஜித் பிரேமதாச

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் வெறும் இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை கௌரவிக்கும் வகையில் 'மங்களவின் அரசியல் பயணம்' நிகழ்வு நேற்று மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

வெறும் இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது. இராணுவ பாதுகாப்புக்கு மேலாக பொருளாதாரத்தின் உறுதிப்பாடும் தேசிய ஒற்றுமையினூடாகவே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.

எமது தேசிய வருமானத்தில் 54 வீதமானவை செல்வந்தர் வர்க்கம் அனபவிக்கதானவும் அடிமட்ட மக்களுக்கு பொருளாதார சலுகைகள் முழுமையாக சென்றடைவதில்லை. அனைவருக்கும் சமமானதும் சகல மக்களுக்கும் சென்றடைய கூடியதுமான எமது தனித்துவத்துக்கு ஏற்றது போன்ற பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers