யாழில் காணிகளை கண்காணித்த அமெரிக்க பிரதிநிதிகள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது உண்மைக்கு புறம்பான செய்தி.

எனினும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகாரக அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என்பதை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகின்றோம்.

மேலும், இந்த விடயத்தினை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers