ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரி விடுவித்தமைக்கு இதுவே காரணம்!

Report Print Murali Murali in அரசியல்

தனது தேர்தல் பிரசாரத்துக்கே பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை செய்திருக்கின்றார் என தேச விடுதலை கட்சியின் பிரதித் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் விரக்தியுற்றிருக்கும் நாட்டு மக்கள் தற்போது பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிங்கள பெளத்த மக்கள் மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து இணைந்து செயற்பட ஆரம்பித்திருக்கின்றனர்.

தேரர்களும் எம்முடனே இருக்கின்றனர். இதனை பிளவுபடுத்தி பெளத்தர்களை எம்மில் இருந்து தூரமாக்கவே தற்போது பொதுபலசேனா முயற்சிக்கின்றது.

அதற்காகவே கண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டத்தில், சிங்கள இராஜ்ஜியம் ஒன்றை அமைக்க ஒன்றுபடுமாறு ஞானசார தேரர் அழைப்பு விடுத்துளார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers