மக்களுக்கே அச்சுறுத்தல்! அனுரகுமார திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடும்போக்காளர்களின் பொறியில் சிக்காத ஓர் அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதன் மூலமே தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers