ஜே.வி.பியை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைப்பது குறித்து சுதந்திரக் கட்சி கவனம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜே.வி.பியுடன் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜே.வி.பி. கட்சியுடனும் விஜயதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறிச் சென்றவர்கள் மற்றும் மலர்மொட்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்பட விரும்பாத தரப்பினர் மலர்மொட்டு தரப்பில் இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.