வரவு செலவு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் 60 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன : மங்கள சமரவீர

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கம் கடந்த வருடத்தில் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் 60 சதவீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்தமாக 84 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் இன்னும் 16 திட்டங்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இதேவேளை அரசாங்கம் பல்வேறு முழுமையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

உலகம் வெப்பமாகுதல் திட்டத்தின் கீழ் இலங்கையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு 450 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளன.

அரசாங்கம் பதவிக்கு வந்த போது பல்வேறு விடயங்கள் தொடர்பான உறுதிமொழிகளை கூறி இருந்தது.

அதனடிப்படையில் குறித்த உறுதி மொழிகளில் சில இதுவரை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், எஞ்சியவை எதிர்வரும் காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.