முஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்கக் கூடாது! ஓரிரு மாதத்தில் மீண்டும்..? எச்சரிக்கும் ரதன தேரர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்தப்பட பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாமல் விடுதலை செய்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers